சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் பலி.

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சவுதி அரேபிய அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் ஏறாவூரைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஹமீட் சபீர் (வயது 38) எனும் இளைஞனே மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு(5) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் அவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம்(6) அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.