14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது நடைமுறையில்லை.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது நடைமுறையில்லை என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் (PHI) தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதன்படி ,பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வழக்கம் போலவே நடந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் 90 சதவீத மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்த முடியுமென தாங்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக தங்களால் எதிர்பார்த்த விகிதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அவர் கூறினார்.
நகரங்களிலும் கொழும்பிலும் உள்ள ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளாக செயற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ஊழியர்களை அழைக்கிறார்கள் என்றும் அன்றாட தொழில்களில் ஈடுபடும் நபர்கள் மட்டுமே வீட்டில் தங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ,அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் சாதாரன அன்றாட நடைமுறைகளின் கீழ் செயற்படுகிறார்கள் என்றும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், எந்தவொரு பொது போக்குவரத்து முறையும் செயற்படவில்லை. அதற்கு பதிலாக, மக்கள் தங்கள் தனியார் வாகனங்களில் பயணம் செய்கிறார்கள் என்றும் ரோஹன மேலும் கூறினார்.