கர்ப்பிணி தாய்மார்களுக்குத் தடுப்பூசி – திகதி அறிவிப்பு.
நாடுமுழுதிலும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இம்மாதம் 9ஆம் திகதி முதல் (புதன்கிழமை) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் ,நாடுமுழுவதிலும் தற்போது இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாகவும், இவர்களில் சிறப்பு அளவுகோல்களின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.