ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்.

ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.
கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் குறித்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றைய தினத்தில் அனைத்து வங்கிகளையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.