முகக்கவசம் அணிவதற்கான விதிகள் வரும் 15ம் தேதி முதல் நீக்கப்படும்.
முகக்கவசம் அணிவதற்கான விதிகள் வரும் 15ம் தேதி முதல் நீக்கப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி ,செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் யூலி எடெல்ஸ்டீன், எதிர்வரும் நாட்களில் தொற்று அதிகரிக்கவில்லை என்றால் இந்தக் கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்படும் என்று குறிப்பிட்டார். நோய்த் தொற்று அங்கு குறைந்து வருதால் கூட்டம், சமூக இடைவெளி, சுகாதார வழிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த 1ம் திகதி முதல் நீக்கப்பட்டன.
மேலும் ,இதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதற்கான விதிகளும் நீக்கப்பட உள்ளன. ஆனால் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள 9 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை, பிற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான சோதனை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.