இப்போதைய பயணத் தடை எப்போது தளரும்? – இராணுவத் தளபதி பதில்
நாட்டின் கொகொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தி, கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தற்போது காணப்படும் பரிந்துரைகளின்படி, அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை அமுலாக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பகுதிகளில் கொரோனா பரவும் அபாயம் காணப்படுவதால் மக்களுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.