ஒரே தடவையில் பத்து பிள்ளைகள்.

ஒரே தடவையில் பத்து பிள்ளைகள் : உலக சாதனையை வசமாக்கிய தென் ஆபிரிக்கப் பெண்
ஒரே தடவையில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார்.
37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார்.
இதுவரை ஒரே தடவையில் 9 பிள்ளைகளைப் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது. கடந்த மாதம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.