மின்னல் தாக்கி 20 பேர் பலி! மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் நடந்த சோகம்
மேற்கு வங்கத்தில், நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் உள்ள 3 மாவட்டங்களில், திங்கட்கிழமையன்று மின்னல் தாக்கி மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்.
முர்ஷிதாபாத் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் தலா 9 பேர் மற்றும் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் 2 பேர் என மொத்தம் 20 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.
மேலும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 3 பேர் மின்னல் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக ஜங்கிப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவசித்த பிரதமர் நரேந்திர மோடி, இழப்பீட்டு தொகையாக தலா ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நேற்று கொல்கட்டா, ஹூக்ளி, ஹௌரா, நடியா, முர்ஷிதாபாத், பங்குரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயங்கரமான இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. பருவமழைக்கு முந்தைய மழையான் இது புதன்கிழமை வரை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.