மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இந்த தடுப்பூசிகள் விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள், கடந்த 6ம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடதக்கது.