மேலும் 1,034 பேர் நேற்று மாட்டினர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 1,034 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை அந்தச் சட்டத்தை மீறிய 26 ஆயிரத்து 920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.