சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.
தலைநகர் டமாஸ்கசில், இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்கியதாக கூறியுள்ள சிரியா, தனது வான்தாக்குதல் தடுப்பு முறையை ஆக்டிவேட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் போர் விமானங்கள் டமாஸ்கசின் மீது குண்டுகளை வீசியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.சிரிய ராணுவ நிலைகளின் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.டமாஸ்கசின் விமான நிலையம் அருகிலும், ஹோம்ஸ் மாகாணம், ஹாமா மற்றுமத் லதாகியா மாகணங்களிலும் இந்த குண்டுகள் போடப்பட்டதாக சிரியன் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ,பாலஸ்தீனின் காசா மீது கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் அதிர்வுகள் முடிவதற்குகள் இஸ்ரேல் இப்போது சிராயா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிரியாவின் சில இடங்களில் இருக்கும் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஈரான் படைப்பிரிவுகளை தாக்கும் விதமாக இஸ்ரேல் இந்த போர் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.