வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது தொடர்பான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளார்.
வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்கும், மேம்படுத்தும் அத்துடன் அபிருத்தி செய்யும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்த தீர்மானம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.