அரச உத்தியோகத்தர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.

மட்டக்களப்பு – மண்முனைப்பற்றில் அரச உத்தியோகத்தர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் குறித்த நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.