கைகளில் வளையல்.. பெண்கள் உடை – காதல் விவகாரத்தில் சிறுவனை கொடுமைப்படுத்திய கிராமமக்கள்
ராஜஸ்தானை சேர்ந்த சிறுவனை கிராம மக்கள் சிலர் பெண்கள் அணியும் உடையை உடுத்த சொல்லியும் வளையல் அணிந்துக்கொள்ளவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டம், பதான் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூரை சேர்ந்த கிராம மக்கள் சிறுவனை கட்டாயப்படுத்தி பெண்கள் அணியும் ஆடையை அணிந்துக்கொள்ள வற்புறுத்தியுள்ளனர். ஊர் நடுவே வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. கைகளில் வளையல்களை அணிந்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். காதல் விவகாரத்தில் சிறுவனை கிராம மக்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதி மக்களால் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ‘சிறுவனை கொடுமைப்படுத்தும் வீடியோ எங்கள் பார்வைக்கு வந்ததும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டோம். சிறுவனும் அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதுகிராமத்தில் தெரியவந்ததையடுத்து சிறுவனை அவமானப்படுத்தும் விதமாக ஊர் மக்கள் முன்னிலையில் கழுத்தில் சங்கிலியால் கட்டியுள்ளார். அதன்பின்னர் கைகளில் வளையல் அணிவித்துள்ளனர். பெண்களை அணியும் உடையை உடுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அந்தப்பெண்ணின் குடும்பத்தினரும் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.