பீகார் காவல்துறையின் முதல் பெண் முஸ்லிம் டி.எஸ்.பி என்ற சாதனை படைத்த 27 வயது பெண்

பீகாரில் 27 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர் 64வது பீகார் பொது சேவை ஆணையத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி. ஆன முதல் இஸ்லாமிய பெண்மணி என்ற சாதனையை பெற்றுள்ளார்.

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவைச் சேர்ந்தவர் ரசியா சுல்தான். ஜார்க்கண்டின் பொகாரோ எஃகு ஆலையில் ஸ்டெனோகிராஃபராக பணிபுரிந்த அவரது தந்தை முகமது அஸ்லம் அன்சாரி, 2016ல் உயிரிழந்தார். இதனையடுத்து தனது பள்ளிப்படிப்பை போகாரோவில் முடித்த ரசியா, ஜோத்பூருக்கு மின் பொறியியல் துறையில் பி.டெக் படிப்பை முடித்தார். ரசியாவுக்கு அவரது தாயும், ஒரு சகோதரர் மற்றும் 5 சகோதரிகள் என 6 உடன்பிறப்புகளும் உள்ளனர். ரசியாவின் மூத்த சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது சகோதரர் உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

தற்போது ரசியாவின் குடும்பத்தினர் போகாரோவில் வசித்து வசிக்கின்றனர். 27 வயதான ரசியா தற்போது பீகார் அரசாங்கத்தின் மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், தனது சிறுவயது கனவாக இருந்த பீகாரின் பொது சேவை ஆணையத் தேர்வுகளான பிபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்த அவர், தற்போது அதை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார். பீகார் காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 40 நபர்களில் ரசியாவும் ஒருவர். இதன்மூலம் பீகார் காவல்துறையில் டி.எஸ்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை ரசியா பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரசியா அளித்த பேட்டியில், பொது சேவை ஆணையத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது குழந்தை பருவ கனவு என்றும் தற்போது அது பலித்துள்ளது என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். 2017ல் பீகார் அரசாங்கத்தின் மின்சாரத் துறையில் பொறியாளராக வேலைக்கு சேர்ந்ததில் இருந்து பிபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு காவல்துறை அதிகாரியாக பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், மேலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்ய முன்வருவதில்லை. இதனை களைய நான் முயற்சி செய்வேன் என்றவர்,

முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு கல்வி கற்பது தடையாக உள்ளது. கனவுகளை நிறைவேற்றுவதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவை வழங்குமாறு ரசியா கேட்டுக்கொண்டார். புர்கா அல்லது ஹிஜாப் அணிவது பெண்களுக்கு ஒரு தடை அல்ல என்று அவர் கூறியியுள்ளார். ரசியா சமீபத்தில் COVID-19 தொற்றில் இருந்து மீண்ட நிலையில், தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும், வதந்திகளையும் அகற்ற முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.