நோயாளர்களுக்கான மருந்துகளை வீட்டிலிருந்தவாறு பெற்றுக்கொள்ளலாம்!

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் திணைக்களத்தின் ஊடாக மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மாங்குளம் வைத்தியசாலை நிர்வாகம் ஆரம்பித்துள்ளது.
எனவே மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்கள் அனைவரும் வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 021 2060006 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தங்களின் பெயர், கிளினிக் திகதி, கிளினிக்கின் பெயர், கிளினிக் இலக்கம், வதிவிட முகவரி, தொடர்பு இலக்கம் ஆகியவற்றை தெரிவித்து தங்களுக்கான மருந்து விநியோகத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.