மளிகை பொருட்களை வாங்க அம்புலன்ஸின் வந்த நபருக்கு அபராதம்!
நாகர்கோவிலில் மளிகை பொருட்களுடன் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். விசாரணையில் மருத்துவமனைக்கு மளிகை பொருட்கள் வாங்க ஆம்புலன்ஸில் வந்ததாக அதனை ஓட்டி வந்த நபர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்க ஆம்புலன்சில் வந்த நபர். மளிகை பொருட்களுடன் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் சிறு மளிகை கடைகள் மாலை 5 மணியுடன் மூடப்படும் நிலையில், கோட்டாறு பகுதியில் மொத்த வியாபார கடைகள் இரவு 9 மணிக்கு மேல் சரக்கு இறக்குவதற்கும் ஏற்றுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விதி மீறலில் ஈடுபட்டு மளிகை பொருட்களை சில்லறை வியாபாரம் செய்த கடைகளுக்கும், அனுமதியின்றி வரும் நபர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வந்தனர்.
அப்போது அங்கு ஆம்புலன்ஸ் ஒன்றில் மளிகை பொருட்கள் நிரம்புவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நோயாளிகளை விரைந்து மருத்துவமனை கொண்டுச்செல்ல பயன்படுத்தும் வாகனத்தை சரக்கு வாகனம் போல் பயன்படுத்தி மளிகை பொருட்களை நிரப்பி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் விசாரித்ததில் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கேன்டீன்க்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க வந்ந்தாக கூறியுள்ளார்.
அவரிடம் 500 ரூபாய் அபராதம் வசூல் செய்ததோடு, அம்மருத்துவமனை தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருவதாகவும் கூறி எச்சரிக்கை விடுத்ததோடு டிரைவரிடம் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரையும் கூறி அனுப்பினர்.