உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் சத்தியப்பிரமாணம்.

கொழும்பு : மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில், இன்று (14) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.