தமிழ்நாடு அரசு நாளை முதல் நீட்டிக்கப்படும் ஊரடங்கில் கூடுதலாக 3 தளர்வுகளை அறிவித்திருக்கிறது.
தமிழ் நாடு: நாளை முதல் ஒருவாரத்துக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து அறிவிப்பை ஜூன்11-ம் தேதி வெளியிட்டது. அதில் தொற்று குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக், சலூன் கடைகள் திறப்பு உள்பட பல தளர்வுகள் கொடுக்கபட்டிருந்தன.
இந்த தளர்வுகளில் தேநீர் கடைகளுக்கும் அனுமதி கொடுத்திருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. டாஸ்மாக் திறக்கும்போது டீக்கடைகளைத் திறக்கக் கூடாதா என்ற வாதங்களும் எழுந்தன. இதையடுத்து இன்று கூடுதலாக தளார்வுகளை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
அதில், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கபடுகிறது. பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. கடைகளின் அருகில் நின்று தேநீர் குடிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.