யாழில் பொலிஸ் உத்தியோகத்தராக நடித்தவர் வசமாக சிக்கினார்!
தன்னைப் பொலிஸ் உத்தியோகத்தராகக் காண்பித்து நடமாடிய ஒருவரைக் யாழ்., கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் இன்று (14) கைதுசெய்தனர்.
அச்செழு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியிருந்ததுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் வைத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கோப்பாய் பகுதியில் வைத்து கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.