இலங்கை பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை ஜூலை 7ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டிஹாட் ஏர்வேஸ் இணையதளத்தில் புதுப்பிப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைய முடியாது என அபுதாபியை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இராஜதந்திரி அல்லது ஐக்கிய அரபு எமிரேட் நாட்டவர் அல்லது கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்டவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 12ம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை அமுலில் இருக்கின்றது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், தென்னாப்பிரிக்கா, சாம்பியா, டி.ஆர். காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய 10 நாடுகளின் பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.