ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Euro 2020 இன் Group of Death என அழைக்கப்படும் குழு F இன் போட்டிகள் இன்று நடைபெறுகின்றது.
இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் போர்ச்சுக்கல் ஐ ஹங்கேரி எதிர் கொண்டது. Covid-19 காரணமாக ரசிகர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இன்றைய போட்டியில் ஏறத்தாழ 68000 ரசிகர்களுடன் மீண்டும் அரங்கம் நிறைந்த ரசிகர் கூட்டத்துடன் போட்டி இடம்பெற்றது.
இப் போட்டியில் ஆடியதன் மூலம் 2004 ,2008, 2012, 2016 ,2020 என 5 Euro கிண்ண போட்டிகளில் பங்கெடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார் கிறிஸ்டினா ரோனால்டோ.
போட்டியின் முதல் பாதியில் ரோனால்டோ ஒரு இலகுவான சந்தர்பத்தை கோல் ஆக மாற்ற தவறிய நிலையில் முதல் பாதி கோல் ஏதும் இன்றி முடிவடைந்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் ஒன்றிற்காக தீவிரமாக முயற்சித்தன. ஆட்டம் இறுதி 10 நிமிடங்களை நெருங்கும் வேளையில் ஹங்கேரி ஒரு கோல் அடித்தது.
எனினும் அக் கோல் Offside என நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டி முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் Portugal சார்பில் Gurreiro முதல் கோல் அடித்து ஆட்டத்தை Portugal இன் பக்கம் திருப்பினார்.
அடுத்த நிமிடத்திலேயே Portugal இற்கு Penalty வாய்ப்பு கிடைக்க அவ் வாய்ப்பை Cristiano Ronaldo கோல் ஆக மாற்றினார். இதன் மூலம் Euro கிண்ண போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். Euro கிண்ணத்தில் Ronaldo இன் 10 ஆவது கோல் இதுவாகும். மீண்டும் Ronaldo மேலதிக நேரத்தில் ஒரு கோல் அடித்து Portugal இன் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.