சமையல் எரிவாயு வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் பரிசோதனை.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற உரம் தொடர்பான முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சமையல் எரிவாயு வியாபாரிகளது வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதோடு, மருந்தகங்களும் பரிசோதிக்கப்பட்டதுடன் பாவனையாளர் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.