முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் அன்பளிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு இயற்கை சுவாச இயந்திரம் ஒன்று (15) மாலை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராய்ச்சிய மக்கள் நலன் காப்பகம் மற்றும் குழந்தைகள் பசி நிவாரண நிதியம் ஆகியன இணைந்து 53.5 இலட்சம் ரூபா பெறுமதியான வென்டிலெட்டர் இயந்திரம் ஒன்றே முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்கள்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் நிலையில் மாவட்ட மருத்துவமனையில் இயற்கை சுவாச இயந்திரம் உள்ளிட்ட அவசர மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறையாக காணப்பட்டுள்ளது.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ சங்கம் கொடையாளர்களிடம் இருந்து அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் தேவை என்ற கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதற்கமைய இவ்விரு அமைப்புக்களும் இணைந்து குறித்த வென்டிலெட்டர் இயந்திரத்தை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனை விட கொரோனா மருத்துவமனை கட்டிட புனர்நிர்மானத்திற்காக மக்கள் நலன் காப்பகத்தினால் இரண்டு இலட்சம் ரூபா பண உதவியும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.