திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்தால் ஆலய வருமானத்தின் பத்து இலட்ஷம் ரூபா பெறுமதியில் பயணத்தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டடான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் 400 குடும்பங்களுக்கும், இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 200 குடும்பங்களுக்குமாக 600 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆலய வளாகத்தில் இருந்து பிரதேச செயலக அதிகாரிகள் வாகனங்களில் பொருட்களை ஏற்றிச் சென்று வீடு வீடாக உலர் உணவு பொருட்களை மக்களுக்கு கையளித்தனர்.
இந் நிகழ்வில் ஒட்டுசுட்டடான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஷ், இந்து கலாச்சார உத்தியோகத்தர் சி.மோகனராசா, திருமுறிகண்டி மற்றும் இந்துபுரம் கிராம அலுவலர்கள், திருமுறிகண்டி பிள்ளையாரை ஆலய குரு, ஒட்டுசுட்டடான் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்து கொண்டு இவ் உலருணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.