அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையில் வரலாற்று சந்திப்பு.
ஜெனீவா: அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
அதன்படி ,ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதற்கமைய ,குறித்த சந்திப்பு ஜெனீவாவில் இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30 இடம்பெரும் என்றும் இது நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்கு நீடிக்கும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த சந்திப்பின்போது எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ,இதேவேளை இந்த சந்திப்பின் மூலம் குறிப்பிடத்தக்க விடயங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது எனவும் அமெரிக்க மூத்த அரச அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.