அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினரால் நிறுக்கும் கருவிகள் பரிசோதனை.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாக யாழ்ப்பாண மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் உத்தியோகத்தர்களால்
இன்றயை தினம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடமாடும் மரக்கறி வியாபாரிகள், மீன்வியாபாரிகள், வெதுப்பக உற்பத்தி வியாபாரிகள், வெதுப்பகங்கள், சதொச நிறுவனம், கூட்டறவுச்சங்கங்கள் மற்றும் சில நிரந்தர வியாபார நிறுவனங்கள் என்பவற்றில் பயனபடுத்தப்படும் நிறுக்கும் கருவிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பல நடமாடும் வியாபாரிகளால் அரச அங்கிகாரமற்ற நிறுக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றமை அவதானிக்கப்பட்டதுடன் அவற்றினை சீர் செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.