பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ,இதற்காக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 20 தடுப்பூசிகள் தேவை எனவும், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.