இணையவழி மதுபான விற்பனைக்கு கொரோனா தடுப்புச் செயலணி அனுமதி மறுப்பு.

கொழும்பு; இணையவழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்வதற்குக் கொரோனாத் தடுப்புச் செயலணி அனுமதி மறுத்துள்ளது என அதன் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டால் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையம் ஊடாக மதுபானங்கள் விற்பனை செய்வதற்குக் கலால் திணைக்களம் திட்டமிட்டது. இதற்கு நிதி அமைச்சும் கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியது.
எனினும், இந்தத் திட்டத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தரப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
இதனையடுத்து கொரோனாத் தடுப்புக்கான செயலணி அனுமதி வழங்கினால் மட்டுமே குறித்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கான அனுமதியை வழங்க குறித்த செயலணி மறுத்துள்ளது.