கொழும்பில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விழுந்தது.

கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் ஒன்று நேற்றிரவு இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி சொய்சா என்ற குறித்த கட்டடம் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கட்டடத்தை இடிக்க உரிமையாளர் முன்பு அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.
மேலும் ,இந்நிலையில் நேற்றிரவு இரவு கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், அதனால் உயிரிழப்புகளோ எதுவித காயங்களோ பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் உறுதிபடுத்தினர்.