அரியவகை புள்ளி சுறா மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது!

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலைக்குள் சிக்கிய புள்ளி சுறா எனப்படும் அரியவகை சுறா மீண்டும் கடலுக்குள் மீனவர்களால் விடப்பட்டுள்ளது.
இதன்படி ,2000 கிலோவிற்கு மேற்பட்ட நிறையுடைய இது அரியவகை சுறா என அறியப்படுகின்றது.
மேலும் ,குறித்த இடத்திற்கு வருகை தந்த மீன்பிடி நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து சென்றுள்ளனர்.