கருப்பு பூஞ்சை பாதிப்பால் மும்பையில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு கண்கள் நீக்கம்
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதால் கண்கள் நீக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மும்பையில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு சிறுமி என 3 பேருக்கு கண்கள் நீக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றின் 2ஆவது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் அதிகரித்து வருவதால், அதில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்தது. இதனால் கருப்பு பூஞ்சை நோயை பெரும்பாலான மாநிலங்கள் தொற்று நோயாக அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோய் பெரும்பாலும் கண்களை தாக்குவதால், சிலர் கண்களை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த வகையில் மும்பையில் 4 மற்றும் 6 வயது குழந்தைகள் மற்றும் 14 வயது சிறுமி என மூன்று பேரின் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிரைலயில், 4 மற்றும் 6 வயது குழந்தைகளுக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. திடீரென கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு கண்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
14 வயது சிறுமிக்கு 48 மணி நேரத்திற்குள் கண்கள் கருப்பாக மாறியுள்ளது. கருப்பு பூஞ்சை மூக்கிலும் பாதித்துள்ளது. மூளையை பாதிப்பதற்குள் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த முயன்றனர். ஆறு வாரங்கள் சிகிச்சை அளித்தும் அவர்களால் கண்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு கடந்த ஒரு மாதம் ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். அதன் பின்னர் திடீரென, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்து. அந்த கூறுமியின் குடலில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆஞ்சியோகிராஃபி செய்யப்பட்டது, கருப்பு பூஞ்சை அவரது வயிற்றுக்கு அருகில் இரத்த நாளங்களை பாதித்திருப்பதைக் கண்டறிந்தோம் என டாக்டர் தெரிவித்தார்.