சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எகிறும் வாய்ப்பு!
நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும், பால்மாவின் விலையை அதிகரிக்கக் கோரி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நிதி அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா ஒரு கிலோ பைக்கற் 350 ரூபாவாலும், 400 கிராம் பைக்கற் 140 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டும் என்றும் பால்மா இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையில், சந்தையில் காய்கறிகள் மற்றும் அரிசியின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதேபோல, சமையல் எரிவாயு நிறுவனங்களும் விலை உயர்வை எதிர்பார்க்கின்றன.
இதேவேளை, தாம் கொரோனாத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு தம்மைப் பெரிதும் பாதித்துள்ளது எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.