கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு: மதுபானக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைப்பு
இந்தியாவும் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கியது. கொரோனா முதல் அலையை ஒப்பிடும்போது, இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா முதல்அலையின்போது நாடு முழுவதுக்கும் மத்திய அரசு ஊரடங்கைப்பித்து பின்னர், படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையின்போது ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கையும் தளர்வுகளையும் அறிவித்துவருகின்றன.
கேரளாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. அதனால், ஏப்ரல் மாதம் முதல் கேரளாவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவந்தது. கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்த நிலையில், கேரளாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்றைக்கு முந்தைய தினத்திலிருந்து பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. மதுக்கடைகள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்பட்டன.
இந்தநிலையில், இன்றும், நாளையும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டது. இருப்பினும், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.