நியூசிலாந்து பிரதமர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் .
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று (18) முதல் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவும் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதன்படி ,உலக நாட்டுத் தலைவர்களும் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
அந்நிலையில் ,நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் ,நியூசிலாந்து நாட்டில் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டில் மொத்தம் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.