ஒரு இலட்சம் கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக நாட்டின் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பாரதிநகர் குறுக்குவீதி புனரமைக்கும் வேலைத்திட்டம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சுமார் 2 கோடியே 33 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி பாரதிநகர் குறுக்குவீதியானது ஒரு கிலோ மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டமே இராஜாங்க அமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.