கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான ஆராய்வு.
கிளிநொச்சி, இரணைமாதா நகருக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக ஏற்படுத்தி தந்துள்ள வாழ்வாதாரத்தினை சரியாக பயன்படுத்தி சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
கடற்படையிரால் தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாக கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட கடற்படையினருடன் கலந்துரையாடுவதாக உறுதியளித்ததுடன், கடற்றொழிலாளர்கள் சட்ட விரோத செயற்படுகளுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் வினயமாகக் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.