தபால் திணைக்கள சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகளுக்கு பொருட்கள் மற்றும் கடிதங்களை பகிர்ந்தளிக்கும் சேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரைவு தபால் சேவை, தபால் நிலையம் ஊடாக மருந்துகளை பகிர்ந்தளித்தல் மற்றும் பணப்பரிமாற்றல் என்பனவும் இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.