யாழ். மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 27 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 07 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.