யாழ். எழுதுமட்டுவாளில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு!

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாள் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்று (20) கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள காணி ஒன்று துப்பரவு செய்யப்பட்டபோது வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டது.
உடனடியாகக் கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.