2 வயது குழந்தையின் வியத்தகு நினைவாற்றல்; இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ்-ல் இடம்பிடித்து சாதனை!
புதுச்சேரி வில்லியனூர் வசந்தா நகர் பகுதியை சார்ந்தவர் விவசாயி பாலாஜி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 2 வருடம் 4 மாதமே ஆன தேயன்ஷி என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் நினைவாற்றல் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தை பல்வேறு உருவங்கள், வண்ணங்கள், பெயர்களை கூறி அசத்தி வருகின்றாள்.
குறிப்பாக ஆங்கில எழுத்துக்கள், 10 தேசிய தலைவர்களின் பெயர்கள், 12 காய்கறிகளின் பெயர்கள், 12 விலங்குகளின் பெயர்கள், 19 உடல் உறுப்புகளின் பெயர்கள், 12 வகையான வடிவங்கள் பொருத்துதல் என கண்டறிந்து வந்ததால் அதனை பதிவு செய்து India Book of Records 2021 புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை பாராட்டும் வகையில் பலரும் குழந்தை தேயன்ஷி நினைவாற்றல் மற்றும் பெற்றோரை பாராட்டி வருகின்றனர்.
ஒன்றரை வயதில் இருந்து தனது மகளின் ஆர்வத்திற்கு ஏற்ப பயிற்சி அளித்து வருவதாக கூறும் தாய் பவித்ரா, குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும். எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் பயிற்சி கொடுக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேர பயிற்சி போதும் என்கிறார்.
கொரோனா காலம் என்பதால் மழலையர் வகுப்பு மற்றும் பள்ளிகள் திறக்கப்படாததால் பெற்றோர் முழு ஈடுபாடுடன் தினமும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டால் அனைத்து குழந்தைகளும் சாதனை செல்வங்களே.