வடமராட்சியில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

யாழ்., வடமராட்சி, தொண்டமானாறு கடற்பரப்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.