இந்த வாரம் சபை இரு நாள் மட்டுமே.

நாடாளுமன்ற அமர்வு இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும்.
இதன்படி நாளையும், நாளைமறுதினமும் சபை அமர்வுகளை முன்னெடுப்பதற்கு இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி சபை நடவடிக்கைகளை இரு நாட்களுக்கு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.