யாழில் இன்று மாத்திரம் நால்வர் கொரோனாவால் சாவு!

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும், 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912ஆக உயர்வடைந்துள்ளது.