ரணிலுக்கு அருகில் அமரமாட்டேன்! – அநுரகுமார பிடிவாதம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருகை தர உள்ளார்.
இந்தநிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அடுத்ததாக ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் அமர முடியாது என கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்
தனது ஆசனத்தை அத்துரலியே ரத்தன தேரர் அல்லது இரா. சம்பந்தன் ஆகியோரது ஆசனத்துக்கு அருகில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை கொடுத்துள்ளார்
இல்லையெனில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அருகில் மாற்றுமாறும் யோசனை முன்வைத்துள்ளார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி வரிசையின் முன்வரிசையில் 13ஆவது ஆசனம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.