‘பெட்ரோல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையே காரணம்’
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கச்சா எண்ணெய் விலையே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.
80 சதவிகித எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலரை தாண்டியுள்ளதை சுட்டிக்காட்டி அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.