துமிந்தா சில்வா இன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவார் : தி மார்னிங்
தற்போது மரண தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா இன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவார் என தி மார்னிங் தெரிவித்துள்ளது.
சட்ட ஆதாரங்களை மேற்கோளிட்டு அவரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அச் செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் 2016 செப்டம்பரில் உயர் நீதிமன்றம் அவருக்கும் , அவரோடு செயல்பட்ட ஏனைய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்தது.
இதற்கிடையில், பொசொன் போயாவை முன்னிட்டு 93 பேர் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 16 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் உள்ளனர். மேலும் 77 பேர் சிறு குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.