ரணிலின் தலையும் , மஹிந்தவின் உடலும் இணைந்தால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் : முத்தெட்டுவேகம ஆனந்த தேரர்
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், ஐதேகவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க , முதலில் நாரகேன்பிட்டியில் உள்ள அபாயராம பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தார்.
அவர் வழிபாடுகளின் பின்னர் முத்தெட்டுவேகம ஆனந்த தேரருடன் கலந்துரையாடினார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தலையும் , மஹிந்த ராஜபக்ஷவின் உடலும் இணைந்தால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என ஆனந்த தேரர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும், ரணிலும் மஹிந்தாவும் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்டு மக்களின் வாயிலிருந்து வெளிவந்த ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாங்கள் தலையிட்டு நியமிக்கப் போகும் தலைவர்கள் யார் என மக்கள் இப்போது எங்களிடம் கேட்கிறார்கள் என முத்தெட்டுவேகம ஆனந்த தேரர் , ரணில் விக்ரமசிங்கவிடம் தனது ஆதங்கத்தை நேரடியாக தெரிவித்தார்.