அடுத்த சுற்று 16 போட்டிகளுக்கான போட்டி அட்டவணை.
Euro 2020 தொடரின் குழு நிலைப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இடம்பெற்ற போட்டிகளில் ஒவ்வொரு குழுக்களில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடித்த 12 அணிகளும் மற்றும் 6 குழுக்களிலும் 3 ஆம் இடம் பிடித்த அணிகளில் சிறந்த நான்கு 3 ஆம் இட அணிகளும் அடங்கலாக 16 அணிகள் அடுத்த சுற்றான 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
குழு A இல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இத்தாலி முதலாவது அணியாகவும் Wales மற்றும் Switzerland அணிகள் 4 புள்ளிகளுடன் 2 ஆம் 3 ஆம் இடம் பிடித்து குழு A இல் இருந்து 3 அணிகள் Round of 16 சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.
குழு B இல் அனைத்து போட்டிகளையும் வெற்றி கொண்டு பெல்ஜியம் முதல் இடத்தை பிடித்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. டென்மார்க், பின்லாந்து, ரஷ்யா ஆகிய 3 அணிகளும் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்று இருந்தாலும் டென்மார்க் கோல் வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்து சுற்று 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. குழு B இல் இருந்து 2 அணிகள் மாத்திரம் தகுதி பெற்றுள்ளன.
குழு B இல் அனைத்து போட்டிகளையும் வெற்றி கொண்ட நெதர்லாந்து மற்றும் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. உக்ரைன் 3 புள்ளிகளுடன் 3 ஆம் இடம் பிடித்தாலும் 3 ஆம் இட தகுதியில் குழு C இல் இருந்து 3 ஆவது அணியாக தகுதி பெற்றது.
குழு D இல் இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் குரேஷியா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகள் 4 புள்ளிகளுடன் 2 ஆம் 3 ஆம் இடங்களிலும் நிறைவு செய்து குழு D இல் 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
குழு E இல் Swedan மற்றும் ஸ்பெயின் தோல்விகள் இன்றி முதல் இரண்டு இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. சிலோவாக்கியா 3 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தை பிடித்தாலும் மற்றைய குழுக்களின் 3 ஆம் இட அணிகளை விட கோல் வித்தியாசம் குறைவாக பெற்று தகுதியை இழந்தது. போலந்து குழு E இல் வெற்றி எதுவுமில்லாமல் வீட்டுக்கு செல்கிறது.
Group of Death என அளிக்கப்பட்ட குழு F இல் முன்னணி அணிகளான பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இறுதி நாள் போட்டிகளான நேற்றைய போட்டியில் தகுதி பெறும் அணிகள் கணத்துக்கு கணம் மாறினாலும் போட்டி முடிவில் இம் மூன்று அணிகளும் தமது தகுதியை உறுதி செய்தன.
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உடனான போட்டிகளை சமன் செய்து அனைவரையும் மிரள வைத்த ஹங்கேரி துரதிஷ்டவசமாக வெளியேறியது.
சுற்று 16 போட்டிகள் சனிகிழமை முதல் நடைபெற உள்ளன.
சுற்று 16 போட்டிகளுக்கான போட்டி அட்டவணை.