தங்க மாஸ்கை அணிந்துகொண்டு வலம் வரும் நபர்.. விலை என்ன தெரியுமா? வாயடைத்துபோன மக்கள்!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் முககவசத்தை அணிந்து கொண்டு தான் மக்கள் வெளியேறுகின்றனர்.
இதனால், முககவசத்தின் மீது மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். அந்த வகையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒருவர் தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற நபர் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்கை பிரத் யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருகிறார்.
மேலும், உள்ளூர்வாசிகள் இவரை கோல்டன் பாபா என்றே அழைக்கின்றனர். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்….